Posts

Showing posts with the label கோப்பெருஞ்சோழன்

கோப்பெருஞ்சோழன்

  கோப்பெருஞ்சோழன் (புறநனூற்றுப் பாடல்களைத் தழுவி எழுதப்பட்ட நாடகம்)             முனைவர் இர. பிரபாகரன்   அங்கம் – 1 காட்சி – 1   இடம்: பாண்டிய நாட்டில் ஒரு குளக்கரை பங்கு பெறுபவர்: புலவர் பிசிராந்தையார், ஒரு வழிப்போக்கன் பின்னணி: அந்தக் குளத்தில் ஓர் ஆண் அன்னப்பறவையும் அதன் இணையாகிய பெண் அன்னப்பறவையும் அமைதியாக சென்றுகொண்டிருக்கின்றன. அந்த ஆண் அன்னப்பறவையைப் பார்த்துப் புலவர் பிசிராந்தையார் ஏதோ பாடிக்கொண்டிருக்கிறார். தொடர்புள்ள புறநானூற்றுப் பாடல் எண்: 67 வழிப்போக்கன்: ஐயா! நீங்கள் ஒரு அன்னப்பறவைப் பார்த்து மிக அருமையாகப் பாடினீர்கள். ”அந்த அன்னப்பறவை சோழநாட்டின் தலைநகராகிய உறையூருக்குப் போய், சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம், தான் பிசிராந்தையாரின் அடியேன் என்று சொன்னால், அவன் அந்தப் பறவையின் பெட்டைக்கு சிறந்த அணிகலன்களைத் தருவான்.” என்று பாடினீர்கள். கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறதே! நீங்கள் யார்? பிசிராந்தையார்: என் பெயர் ஆந்தையார். நான் பிசிர் என்னும் இந்த ஊரைச் சார்ந்தவனாகையால் என்னை எல்...