Posts

Showing posts with the label இடித்துரைக்கும் புலவர் கோவூர் கிழார்

இடித்துரைக்கும் புலவர் கோவூர் கிழார்

          இடித்துரைக்கும் புலவர் கோவூர் கிழார்             அங்கம் – 1, காட்சி – 1 இடம்: கோவூர் கிழாரின் வீடு பங்குபெறுவோர்: கோவூர் கிழார், கோவூர் கிழாரின் மனைவி கோதை பின்னணி: கோவூர் கிழாரும் அவர் மனைவியும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். கோவூர் கிழார்: கோதை! நான் சென்று நமது மன்னன் நலங்கிள்ளியைச் சந்தித்து வரலாம் என்று நினைக்கிறேன். கோதை: இப்பொழுதுதான் அறுவடை முடிந்திருக்கிறது. நீங்கள் சில நாட்கள் ஓய்வெடுக்காமல் இப்பொழுதே மன்னனைக் காண்பதற்குப் பூம்புகாருக்குப் போகவேண்டுமா? கோவூர் கிழார்: நம் நிலத்தில் பணிபுரிவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் உழுதார்கள், விதை விதைத்தார்கள், களையெடுத்தார்கள், அறுவடை செய்தார்கள். நான் என்ன செய்தேன்? நான் ஏன் ஓய்வெடுக்க வேண்டும்? கரிகாலனின் மகன் வேற்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி இறந்தபின், அவன் மகன் நலங்கிள்ளி பூம்புகாரிலிருந்து ஆட்சி செய்கிறான். அவன் வீரம் மிகுந்தவன்; குறுகிய காலத்தில் பல வெற்றிகளைப் பெற்றவன். அவனைப் பார்த்து அவனைப் பாராட்ட வேண்டும் என்று நா...