Posts

Showing posts from February, 2026

ஒளவையாரும் அதியமானும்

  ஒளவையாரும் அதியமானும் அங்கம் – 1, காட்சி – 1 இடம்: அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை பங்குபெறுவோர்: ஒளவையார், வாயிற்காவலன், அதியமான் பின்னணி: அதியமானிடம் பரிசு பெறுவதற்காக ஒளவையார் வந்திருக்கிறார். வாயிற்காவலன்: (ஒளவையாரை நோக்கி) அம்மா! நீங்கள் யார்? ஒளவையார்: என் பெயர் ஒளவையார். நான் அதியமானைப் பார்க்க வந்திருக்கிறேன். வாயிற்காவலன்: அம்மா, இங்கேயே இருங்கள். நான் சென்று நீங்கள் வந்திருப்பதாக மன்னரிடம் சொல்கிறேன். (வாயிற்காவலன் அதியமானிடம் செல்கிறான்.) வாயிற்காவலன்: (அதியமானை நோக்கி) மன்னா! வணக்கம். தங்களைப் பார்க்க ஒளவையார் என்ற ஒரு பெண்பாற் புலவர் வந்திருக்கிறார். அவர் தங்களைக் காண்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளார். அவரை உள்ளே வரச் சொல்லட்டுமா? அதியமான்: வேண்டாம். அவரை அழைத்து வந்து நமது அரண்மனையில் இருக்கச் சொல். அவருக்குத் தேவையான எல்லா வசதிகளுக்கும் ஏற்பாடு செய். நான் அவரைப் பிறகு சந்திக்கிறேன் என்று அவரிடம் கூறு. வாயிற்காவலன்: அப்படியே செய்கிறேன், மன்னா. வாயிற்காவலன்: அம்மா! மன்னர் உங்களை அரண்மனையில் தங்கி இருக்கச் சொன்னார்.   (ஒளவையாரை அர...