Posts

புலவர் பெருஞ்சித்திரனார்

  புலவர் பெருஞ்சித்திரனார் (புறநானூற்றூப் பாடல்களைத் தழுவி எழுதப்பட்ட சிறு நாடகம்)         முனைவர் இர. பிரபாகரன்     அங்கம் – 1, காட்சி – 1 இடம்: பெருஞ்சித்திரனாரின் சிறு குடிசை வீடு பங்குபெறுவோர்: புலவர் பெருஞ்சித்திரனார், அவரது மனைவி யாழினி, அவர் தாயார் வள்ளி, அவர் மகன் சிலம்பன். பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சியிடம் சென்று பரிசு பெற்று வருவதற்காகப் பெருஞ்சித்திரனார் புறப்படுகிறார். அவரை வழியனுப்புவதற்காக, அவருடைய மனைவி தன் மகன் சிலம்பனைச் சுமந்துகொண்டு முன்றிலில் நிற்கிறாள். சிலம்பன் பசியினால் அழுகிறான். யாழினியிடம் இருந்து பால் குடிப்பதற்காக அவள் முந்தானையை நீக்க முயற்சி செய்கிறான். அவள் தடுக்கிறாள். அவன் அழுகிறான்.   பெருஞ்சித்திரனாரின் தாய் வள்ளி நடக்க முடியாமல், கோலின் உதவியோடு நடந்துவந்து முன்றிலில் நிற்கிறாள். பெருஞ்சித்திரனார்: யாழினி!   நான் அதியமான் நெடுமான் அஞ்சியிடம் சென்று, அண்மையில் அவன் பெற்ற சில வெற்றிகளைப் பற்றியும், ஓளவைக்கு நெல்லிக்கனி கொடுத்ததைப் பற்றியும் புகழ்ந்து பாடிப் பரிசுபெற...

கொடை மடம் கொண்ட பேகன்

  கொடை மடம் கொண்ட பேகன் ( கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகனைப் பற்றிப் புறநானூற்றில் உள்ள பாடல்களோடு கற்பனையும் கலந்து எழுதப்பட்ட ஒரு குறுநாடகம் )                 முனைவர் இர . பிரபாகரன்           காட்சி – 1   இடம் : காடு பங்குபெறுவோர் : பேகன் , தேர்ப்பாகன் பின்னணி : சங்க காலத்தில் , பெருங்கல் நாடு என்று அழைக்கப்பட்ட பழனிமலையைச் சார்ந்த பகுதியை ஆண்ட , வேளிர் குலத்தைச் சார்ந்த குறுநில மன்னன் வையாவிக் கோப்பெரும்பேகன் என்பவன் , வயநாட்டு மன்னனைப் போரில் வென்று , காட்டு வழியாகத் தேரில் தன் அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் . வரும் பொழுது , பெய்யப்போகும் பெருமழைக்கு அறிகுறியாக மின்னல்களோடு கூடிய இடி முழக்கங்கள் பேரொலி எழுப்பி ஆரவாரிக்கின்றன .   மழை வரப்போகிறது என்பதை உணர்ந்த மயில் ஒன்று அகவுகிறது ( கூவுகிறது ); தோகையை விரித்து நடனம் ஆடுகிறது. அதைக்கண்ட பேகன் அந்த மயில் குளிரில் நடுங்குகிறது என்று நி...