Posts

Showing posts from January, 2025

புலவர் பெருஞ்சித்திரனார்

  புலவர் பெருஞ்சித்திரனார் (புறநானூற்றூப் பாடல்களைத் தழுவி எழுதப்பட்ட சிறு நாடகம்)         முனைவர் இர. பிரபாகரன்     அங்கம் – 1, காட்சி – 1 இடம்: பெருஞ்சித்திரனாரின் சிறு குடிசை வீடு பங்குபெறுவோர்: புலவர் பெருஞ்சித்திரனார், அவரது மனைவி யாழினி, அவர் தாயார் வள்ளி, அவர் மகன் சிலம்பன். பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சியிடம் சென்று பரிசு பெற்று வருவதற்காகப் பெருஞ்சித்திரனார் புறப்படுகிறார். அவரை வழியனுப்புவதற்காக, அவருடைய மனைவி தன் மகன் சிலம்பனைச் சுமந்துகொண்டு முன்றிலில் நிற்கிறாள். சிலம்பன் பசியினால் அழுகிறான். யாழினியிடம் இருந்து பால் குடிப்பதற்காக அவள் முந்தானையை நீக்க முயற்சி செய்கிறான். அவள் தடுக்கிறாள். அவன் அழுகிறான்.   பெருஞ்சித்திரனாரின் தாய் வள்ளி நடக்க முடியாமல், கோலின் உதவியோடு நடந்துவந்து முன்றிலில் நிற்கிறாள். பெருஞ்சித்திரனார்: யாழினி!   நான் அதியமான் நெடுமான் அஞ்சியிடம் சென்று, அண்மையில் அவன் பெற்ற சில வெற்றிகளைப் பற்றியும், ஓளவைக்கு நெல்லிக்கனி கொடுத்ததைப் பற்றியும் புகழ்ந்து பாடிப் பரிசுபெற...