கொடை மடம் கொண்ட பேகன்
கொடை மடம் கொண்ட பேகன் ( கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகனைப் பற்றிப் புறநானூற்றில் உள்ள பாடல்களோடு கற்பனையும் கலந்து எழுதப்பட்ட ஒரு குறுநாடகம் ) முனைவர் இர . பிரபாகரன் காட்சி – 1 இடம் : காடு பங்குபெறுவோர் : பேகன் , தேர்ப்பாகன் பின்னணி : சங்க காலத்தில் , பெருங்கல் நாடு என்று அழைக்கப்பட்ட பழனிமலையைச் சார்ந்த பகுதியை ஆண்ட , வேளிர் குலத்தைச் சார்ந்த குறுநில மன்னன் வையாவிக் கோப்பெரும்பேகன் என்பவன் , வயநாட்டு மன்னனைப் போரில் வென்று , காட்டு வழியாகத் தேரில் தன் அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் . வரும் பொழுது , பெய்யப்போகும் பெருமழைக்கு அறிகுறியாக மின்னல்களோடு கூடிய இடி முழக்கங்கள் பேரொலி எழுப்பி ஆரவாரிக்கின்றன . மழை வரப்போகிறது என்பதை உணர்ந்த மயில் ஒன்று அகவுகிறது ( கூவுகிறது ); தோகையை விரித்து நடனம் ஆடுகிறது. அதைக்கண்ட பேகன் அந்த மயில் குளிரில் நடுங்குகிறது என்று நி...